சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!
நடிகர் சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது...
நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” எனும் புதிய படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள புதிய படம் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. இந்தப் படத்தில், நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்கின்றார்.
40 வயதைக் கடந்த நாயகனுக்கும் அவரை விட 20 வயது குறைவான நாயகிக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர்கள் ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் “பட்டாம்பூச்சி” எனும் முதல் பாடல் இன்று (ஜூன் 19) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The first song from the new film "Viswanath and Sons," starring actor Suriya, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.