ஓடிடியில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்போது?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகாவும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கத்துக்கு சென்றனர்.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது.
இந்தப் படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், வரும் செப். 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Details regarding the OTT release of actor Suriya's film Viswanath and Sons have emerged.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.