வியப்பில் ஆழ்த்திய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் குறித்து...
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் இதுவரை, ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) அறிவித்துள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியானது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
நடிகர் சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியானதால் தொடக்கம் முதலே இந்தப் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில், படம் வெளியான நாள் முதல் இதுவரை உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
The production company announced on Sunday (Aug. 30) that the film Viswanath and Sons has grossed ₹240 crore so far.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.