ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைக் கடந்துள்ளது பற்றி...
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு இன்று (ஆக. 23) அறிவித்துள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தைக் கண்டுகளித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், படம் வெளியான நாள் முதல் இதுவரை உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, சூர்யா நடிப்பில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாளை நிறைவு செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The film crew announced today (Aug. 23) that the box office collection of Viswanath and Sons has crossed ₹200 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.