செய்திகள்

நடிகர் விஜய் தந்தை நடிக்கும் கிழக்கு வாசல்! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!!

ராதிகா சரத்குமார் தயாரிப்பில், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆனந்த் பாபு, நடிகை ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கிழக்கு வாசலில் நடித்துள்ளனர்

DIN

நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் அவ்வபோது புதிய தொடர்கள் அறிமுகமாவது வழக்கம். தற்போது இரு தொடர்கள் முடியவுள்ள நிலையில், கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆனந்த் பாபு, நடிகை ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். விசு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற சம்சாரம் அது மின்சாரம் படத்தின் தழுவலாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ராதிகா தயாரிப்பதால் கிழக்கு வாசல் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது கிழக்கு வாசல் தொடருக்கான அதிகாரப்பூர்வ முன்னோட்ட விடியோ (புரோமோ) வெளியிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT