செய்திகள்

வெளியானது டி.ராஜேந்தர் பாடிய அதிருதா பாடல்

மார்க் ஆண்டனி படத்துக்காக டி.ராஜேந்தர் பாடிய ‘அதிருதா’ என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  

DIN

மார்க் ஆண்டனி படத்துக்காக டி.ராஜேந்தர் பாடிய ‘அதிருதா’ என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மார்க் ஆண்டனி. மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. இறுதிக்கட்ட டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை நடிகர் விஷால் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். 

இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) வெளியாக உள்ளது. டி.ராஜேந்தர் பாடிய படத்தின் முதல் பாடலான ‘அதிருதா’ என்கிற பாடல் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ‘அதிருதா’ என்கிற பாடலின் லிரிக்கல் விடியோ இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT