முகப்பு
செய்திகள்

டப்பிங் பணிகளை தொடங்கிய தண்டகாரண்யம் படக்குழு!

இயக்குநர் பா.ரஞ்சித்  தயாரிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கிய 'தண்டகாரண்யம் ' படத்தின் டப்பிங் துவங்கியுள்ளது.

Updated On : 31 ஜூலை 2023, 8:26 pm IST
பகிர்:

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இயக்குநர் அதியன் ஆதிரை அடுத்தப் படமாக தண்டகாரண்யம் படத்தினை இயக்கியுள்ளார். 

அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ஷபீர், ரித்விகா, வின்சு, பாலசரவணன், யுவன் மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒரிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படப்பிடிப்பு நிறைவு பெற்று இன்றுமுதல் டப்பிங்  பணிகள்  துவங்கியிருக்கிறது . 

Advertisement

Advertisement

இப்படத்தில் வின்சு சாம், ஷபீர், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தொழில்நுட்பக் குழுவில் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்கே படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

இந்நிலையில் நீலம் புரடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தினேஷ் டப்பிங் தொடங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments