செய்திகள்

நடிகர் விஜய் அம்மாவுக்குப் பிடித்த சீரியல் எது தெரியுமா?

நடிகர் விஜய்யின் அம்மாவுக்குப் பிடித்த சீரியல் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

DIN

நடிகர் விஜய்யின் அம்மாவுக்குப் பிடித்த சீரியல் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

தமிழ் சினிமாவின் முதன்மை நாயகனாக வலம்வருபவர் நடிகர் விஜய். 
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், 'நான் சிகப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டறை' போன்ற வெற்றிப்படங்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர். அவர் தற்போதும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் சமுத்திர கனியை நாயகனாக வைத்து 'நான் கடவுள் அல்ல' எனும் படத்தை இயக்கியிருந்தார்.

நடிகர் விஜய்யின் தயார் ஷோபா சந்திரசேகர் பாடகி, கதையாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் அவரின் தாயார் ஷோபா அவ்வபோது நேர்காணல் வழங்குகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் வெளியான  ஷோபா சந்திரசேகர் நேர்காணலில் தனக்கு பிடித்த தொலைக்காட்சித் தொடர் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். 

அதில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' தொடர் தனக்கு மிகவும் பிடித்த தொடர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பெண்களின் மேம்பாட்டை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதேபோன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாக்கியலட்சுமி' ஆகிய தொடர்களையும் தொடர்ந்து பார்த்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்கிறது. கிழக்கு வாசல் என அந்தத் தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT