செய்திகள்

‘லியோ’ படத்திற்காக 30 புதிய தோற்றங்களை முயற்சித்த விஜய்! 

லியோ படத்தின் தற்போதைய தோற்றத்திற்காக நடிகர் விஜய் 30 புதிய வித்தியாசமான தோற்றங்களை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. 

ஆரம்பத்தில் விஜய் தலைமுடியை கலைத்துவிட்டுதான் புகைப்படங்களில் தென்பட்டு வந்தார். அப்போது ரசிகர்கள், “ஏன் இப்படி செய்கிறார்?” என கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் லோகேஷ் பிறந்தநாளில் வெளியான புகைப்படத்தில் விஜய்யின் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்த கெட்டப்பிற்காக நடிகர் விஜய் 30 வித்தியாசமான தோற்றங்களை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோரது காஷ்மீர் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப்படம் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT