செய்திகள்

வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா: காரணம் என்ன தெரியுமா?

நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. 

DIN

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 2021ஆம் ஆண்டு நவம்பரில் மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நடிகர் சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. மேலும் டைம் லூப் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் மாநாடு படத்தினை பற்றியும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பினை பற்றியும் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார். இதனை தற்போதுதான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பார்த்து பகிர்ந்துள்ளார். மேலும், “ இதனை நான் எப்படி பார்க்காமல் விட்டேன்... மன்னித்துக் கொள்ளுங்கள்... மிக்க நன்றி” என ட்வீட் செய்துள்ளார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள், “உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்”, “டைம் லூப்பில் எதும் மாட்டிவிட்டீர்களா?” என ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT