செய்திகள்

வைரல் நடிகை உர்ஃபி ஜாவத் கைது!

வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவத், மும்பை காவல்துறையால் செய்து செய்யப்பட்டிருக்கிறார்.

DIN

ஆள் பாதி, ஆடை பாதி என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நடிகை உர்ஃபி ஜாவத்துக்குப் பொருந்தும். காரணம், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பிரபலமான உர்ஃபி, பல முறை தன் ஆடைகளால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார். 

இந்நிலையில், மும்பையில் இன்று காலை காபி அருந்துவதற்காக அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு, திடீரென அவரைச் சூழ்ந்த பெண் காவலர்கள் உர்ஃபி ஜாவத்தைக் கைது செய்வதாகக் கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 

காரணமாக, பொது இடத்தில் முழு முதுகும் தெரியும்படி அநாகரிகமான ஆடையை அணிந்து வந்தததாலேயே கைது செய்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், உர்ஃபியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT