செய்திகள்

காதலரை மணந்தார் நடிகை அமலா பால்!

DIN

திரைப்பட நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் காதலரான ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

கேரளத்தில் மிக எளிய முறையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. புதுமண ஜோடிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். சிந்துசமவெளி படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், மைனா படத்திலிருந்து பலரால் அறியப்பட்டவர். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானார். 

தெய்வத்திருமகள் படத்தில் இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் ஏற்பட்ட காதல், தலைவா படத்திற்கு பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. எனினும் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விலகினர்.
 
விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் அமலா பால் கவனம் செலுத்த தொடங்கினார். ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார். அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளிவந்த 'போலா' என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.

இதனிடையே அவ்வபோது பயணங்கள் மேற்கொள்ளும் அமலா பால், கடந்த மாதம் (அக்.26) தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

காதலர் ஜகத் தேசாய்யுடன் அமலா பால் 

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

SCROLL FOR NEXT