செய்திகள்

சத்யராஜின் தோழர் சேகுவேரா: க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின்  க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின்  க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வசந்த் ரவியுடன் வெப்பன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜாக்சன் துரை 2 படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அலெக்ஸ் இயக்கும் தோழர் சேகுவேரா படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில்  மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT