கோப்புப்படம் 
செய்திகள்

விஜய் ஆண்டனியின் ரத்தம்: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை என்பதைக் காணலாம். 

DIN

சென்ற வாரன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய திரைப்படங்களான சந்திரமுகி - 2, இறைவன், சித்தா வெளியான நிலையில், இந்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை என்பதைக் காணலாம். 

ரத்தம்

தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படம்  வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இறுகப்பற்று

யுவ்ராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் நடித்துள்ள இறுகப்பற்று திரைப்படம் வரும் அக்.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தி ரோட்

த்ரிஷா நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ திரைப்படம் வரும் அக்.6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது.

மார்கழி திங்கள்

பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படம் வரும் அக்.6-ல் வெளியாகிறது. இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்  இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

800

800 திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், மதூர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷாட் பூட் த்ரீ 

அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, சினேகா நடித்துள்ள ஷாட் பூட் த்ரீ படம் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT