முகப்பு
செய்திகள்

அனிமல் படத்தில் நரமாமிசம் சாப்பிடும் வில்லன்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள அனிமல் படத்தில் வில்லன் நரமாமிசம் சாப்பிடும் கதாபாத்திரமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 15 அக்டோபர் 2023, 4:33 pm IST
பகிர்:

2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது.  

இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:  வெளியானது நானியின் ஹாய் நான்னா பட டீசர்!

Advertisement

Advertisement

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். இதில் மனித மாமிசங்களை சாப்பிடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீசரில் கடைசி ஷாட்டில் பாபி தியோல் கையில் கத்தியுடன் ரத்தம் தெறித்த முகத்துடன் எதையோ சப்பிட்டுக் கொண்டிருப்பார். 

நேர்காணல் ஒன்றில் பாபி தியோல், “புதியதாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் படம் ரிலீஸுக்கு. நான் டீசரில் என்ன மென்றுக்கொண்டு இருந்தேனென இப்போது கூற முடியாது” எனக் கூறியுள்ளார். 

இதனால் ரசிகர்கள் நிச்சயமாக இதில் நரமாமிசம் சாப்பிடும் கதாபாத்திரமாகத்தான் பாபி தியோல் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments