செய்திகள்

திரையரங்க இருக்கைகளை உடைத்தது சரியல்ல: லோகேஷ் கனகராஜ்

லியோ டிரைலர் வெளியீட்டில் திரையரங்க இருக்கைகளை சேதப்படுத்தியது மிகவும் தவறான செயல் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

லியோ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் அண்ணனின் லியோ தரம் (தம்ப்ஸ் குறி) லோகேஷ் கனகராஜின் சிறப்பான உருவாக்கம். அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸுக்குப் பாராட்டுக்கள். எல்சியூதான். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சித்தா எந்த ஓடிடி?

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ‘லியோ டிரைலரை வெளியிட்ட பிரபல திரையரங்கத்தின் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு லோகேஷ், ‘உடைக்கக் கூடாதுதான். லியோ டிரைலரை யூடியூபில் சென்சார் செய்யாமல்தான் வெளியிட்டோம். ஆனால்,  பாதிப்புக்குள்ளான திரையரங்கம் யூடியூப் விடியோவையே திரையிட்டுள்ளனர். இதில், எங்கள் பங்கு எதுவுமில்லை. மேலும், அதிக ரசிகர்கள் கலந்துகொண்டதால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. லியோ இசைவெளியீட்டு விழாவை நடத்தாதற்கு இதுவும் ஒரு காரணம்” எனக் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள அந்த பிரபல திரையரங்கம் லியோ படத்தை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT