செய்திகள்

'ஹட்டி' படத்துக்காக திருநங்கைகளுடன் தங்கி பயிற்சி எடுத்த நவாசுதீன்!

இப்படத்தில் நடிக்க நான் திருநங்கைகளுடன் தங்கியிருந்தேன், பெண்மையைத் தழுவுவதற்கான அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டேன் எனக் குறிப்பிட்டார் நவாசுதீன் சித்திக்.

DIN

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக்  இணைந்து நடித்துள்ள ‘ஹட்டி’ திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி (இன்று) வெளியானது.

ஜீ ஸ்டூடியோஸ், சஞ்சய் சாஹா மற்றும் ஆனந்திதா ஸ்டூடியோஸ் ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்தப் படம்  நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தியாவின் மிகப்பெரிய  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும் நேரடி-டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின்  டிரெய்லரை வெளியிட்டதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது.

அதிலும்  நவாசுதீன் சித்திக் முதன்முறையாகத் திருநங்கையாக நடித்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. நவாசுதீன் சித்திக்  மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை,  அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட திருநங்கை கும்பலில் சேர அலகாபாத்திலிருந்து டெல்லிக்கு வரும் நவாசுதீன் சித்திக், அந்த கும்பலில் சேர்ந்து, தனது குடும்பத்தை அழித்த  அரசியல்வாதியாக மாறிய அனுராக் காஷ்யப்பை தேடி பழிவாங்குவதே கதையாக உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள,   இப்படத்தில் நடிப்பதற்காகப் படப்பிடிப்பிற்கு முன்பு, நான் திருநங்கைகளுடன் தங்கியிருந்தேன், பெண்மையைத் தழுவுவதற்கான அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டேன். இந்த அனுபவம் எனக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத்தந்தது. ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அனுராக் காஷ்யப் கூறுகையில், அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநர்.  இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT