செய்திகள்

சொந்த ஊரில் நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம்! மக்கள் கண்ணீர் அஞ்சலி...

நடிகர் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி பசுமலையில் மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

DIN

நடிகர் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி பசுமலையில் மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது, மாரிமுத்து திடீரென மயக்கமடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். 

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தேனி மாவட்டம், வருஷ நாடு அருகேயுள்ள பசுமலை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து, ஆரம்ப காலங்களில் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இயக்குநா்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே.சூா்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியனாா். ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளாா். அதன் பிறகு நடிகராக முத்திரை பதித்தாா்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலா்’ படத்தில் நடித்திருந்தாா். யுத்தம் செய், கொம்பன் உள்ளிட்ட 50 படங்களில் அவா் நடித்துள்ளாா். 

மாரிமுத்துவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் நேற்று(வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைத் துறை பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். 

தொடர்ந்து, மாரிமுத்துவின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான பசுமலையில் இன்று(சனிக்கிழமை) (செப்.9) நடைபெற்றது. காலை முதல் அவரது ஊர் மக்கள், உறவினர்கள் பலரும் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். 

இதன்பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2.30 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. மக்கள் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT