செய்திகள்

ஜெயம் ரவிக்கு வில்லனாகும் ஃபஹத் ஃபாசில்?

நடிகர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க ஃபஹத் ஃபாசிலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

சமீபத்தில்,  தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக   அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் நாயகனாக ஜெயம் ரவியும் நாயகியாக நயன்தாராவும் நடிக்க உள்ளனர். மோகன் ராஜாவே இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT