மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அலென்சியர் லே லோபஸ். தொண்டிமுதலும் த்ரிஷாக்சியும், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
அப்பன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இப்படத்திற்காக, கேரள அரசின் மாநில திரைப்பட விருதும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை) திருவனந்தபுரத்தில் கேரள அரசின் மாநில திரைப்பட விருது வழங்கும் விழா, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, நடுவர்களின் சிறப்பு பரிந்துரையின் பேரில் நடிகர் அலென்சியர் லே லோபஸ், பினராயி விஜயனிடமிருந்து விருதையும் (பெண் சிலை) சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க: கூறியது நடந்துவிட்டது... உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
பின், விருது குறித்துப் பேசியபோது, “பெண் சிலைகளைக் கொடுத்து எங்கள் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டாம். நான் எந்த பெண் சிலையைப் பார்த்தும் மயங்குவதில்லை” எனக் கிண்டலாகக் கூறினார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அலென்சியரின் பேச்சு வைரலானதைத் தொடர்ந்து, “மாநில அரசால் தரப்படும் விருதை பாலியல் ரீதியாக கிண்டலடிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. இது அரசு கொடுக்கிற கௌரவத்தை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது” என அவர் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அலென்சியர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.