செய்திகள்

நாயகன் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

DIN

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நாயகன். மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேலுநாயக்கர் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். 

இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த படமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், நாயகன் 35 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT