முகப்பு
செய்திகள்

எல்லாமே அரசியல்: நடிகை ராதிகா ஆப்தேவை பாராட்டிய அம்பேத்கரின் பேரன்! 

அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் நடிகை ராதிகா ஆப்தேவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.  

Updated On : 14 ஆகஸ்ட் 2023, 8:30 pm IST
பகிர்:

தமிழ் மற்றும் தெலுங்கில் 2012ஆம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானாலும் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்துதான் தமிழில் நடிகை ராதிகா ஆப்தே புகழ் பெற்றார். துணிச்சலான நடிகையான ராதிகா சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார். 

ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர். ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்காக நடிப்பை கைவிடப்போவதில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

Advertisement

Advertisement

அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர்.

‘மேட் இன் ஹெவன் 2’ தொடர் ஆக.10ஆம் நாள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் உள்ளன. இதில் 5வது எபிசோடான நீரஜ் கெய்வான் இயக்கிய டெபிசோடில் நடிகை ராதிகா ஆப்தே தலித் மணப்பெண்ணாக பல்லவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேட் இன் ஹெவன் 2 தொடரில் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், பல்லவியாக நடித்துள்ள தலித் பெண்ணின் எதிர்ப்பு, மறுப்பு, வலியிறுத்தல் என எல்லாம் பிடித்துள்ளது.

இந்த எபிசோடை பார்க்கும் வன்சிட்ஸ், பகுஜன்கள் உங்களின் அடையாளத்தை வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும். எல்லாமே அரசியல். ஜெய் பீம்” எனப் பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள ‘மேட் இன் ஹெவன் 2’ தொடரின் புகைப்படங்களில் நடிகை ராதிகா ஆப்தே, அம்பேத்கர் மற்றும் புத்தரின் புகைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments