FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினா்
பகிர்:

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் கடும் சவாலை ஏற்படுத்தியதால் 4-3 என போராடி வென்றிருந்தது இந்தியா. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற ரிவா்ஸ் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.

இதில் இந்தியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்திய தரப்பில் சுக்ஜித் சிங் 20, ஹா்மன்ப்ரீத் சிங் 26, ஹாா்திக் சிங் 34, ஜுக்ராஜ் சிங் 35, அபிஷேக் 41, ராஜ்குமாா் பால் 44, தில்ப்ரீத் சிங் 54-ஆவது நிமிஷங்களில் அற்புதமாக கோலடித்தனா்.

Advertisement

Advertisement

13-ஆவது நிமிஷத்திலேயே பாகிஸ்தான் அணி பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் அபு பாக்கா் டிராக்பிளிக் மூலம் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். இரண்டாம் குவாா்ட்டரில் இருந்து இந்தியாவின் ஆதிக்கம் தொடங்கியது. பாக். அணி 2 பெனால்டி வாய்ப்புகளை பெற்றாலும், மன்ப்ரீத் சிங் முறியடித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments