முகப்பு
செய்திகள்

லியோ - விஜய் பேசிய தகாத வார்த்தை நீக்கம்!

லியோ டிரைலரில் இடம்பெற்ற தகாத வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 அக்டோபர் 2023, 11:31 am IST
பகிர்:


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம், டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தையும் சர்ச்சையானது. இந்நிலையில், யூடியூபில் வெளியான டிரைலரில் குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர்.

இதையும் படிக்க: அஜித் படத்தில் இணையும் ரெஜினா!

Advertisement

Advertisement

முன்னதாக, நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “பார்த்திபன் கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டதால்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். இதற்கும் விஜய் அண்ணாவுக்கும் தொடர்பு இல்லை. இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார். சில ரசிகர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அந்த வார்த்தைக்கான அர்த்தம் விஜய்க்கு தெரியாதா? ஒரு இயக்குநர் சொன்னாலும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர் இதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.

லியோ அக்.19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments