முகப்பு
செய்திகள்

தனுஷ் - 50 படப்பிடிப்பு தீவிரம்!

தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 25 அக்டோபர் 2023, 4:00 pm IST
பகிர்:

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ்  நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தனுஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனுஷ் - 50 படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இன்னும் 30 நாள்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.