இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் அணி!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (ஜூன் 12) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி அதன் முதல் போட்டியில் வருகிற ஜூன் 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இரண்டு அணிகளும் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர் அட்டவணை
முதல் ஒருநாள் போட்டி - ஜூலை 23
இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜூலை 25
மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜூலை 28
டி20 தொடர் அட்டவணை
முதல் டி20 - ஜூலை 31
இரண்டாவது டி20 - ஆகஸ்ட் 2
மூன்றாவது டி20 - ஆகஸ்ட் 4
Following the conclusion of the T20 World Cup cricket tournament, the Pakistan team is set to play ODI and T20 series against Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.