சிங்கப்பெண்ணே என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் அதிக அளவு சின்னத்திரை தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்ந்து டாப் 5 இடங்களில் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. கிராமத்துப் பின்னணியில் இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடர் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாலைநேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கிராமத்துப் பின்னணியில் ஒளிபரப்பாகும் தொடராக சிங்கப்பெண்ணே இருக்கும்.
படிக்க | விரைவில் அறிமுகமாகும் 3 தொடர்கள்!
இதில் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிகை மனீஷா மகேஷ் நடிக்கிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த வெற்றித் தொடரான, கண்ணான கண்ணே-வை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரையும் இயக்குகிறார்.
இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த மிஸ்டர் மனைவி தொடர் இரவு 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் மிஸ்டர் மனைவி தொடர் இரவு 10 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளது.