நடிகை மிருணாள் தாக்குர் படங்கள்: இன்ஸ்டா / மிருணாள் தாக்குர்
செய்திகள்

வதந்திகளுக்கு பதிலளித்த மிருணாள் தாக்குர்!

நடிகை மிருணாள் தாக்குர் தெலுங்கு படம் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

DIN

மராத்திய திரைப்படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் தமிழ் ரசிகர்களுக்கு சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இதற்கடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்து மிருணாள் தாக்குர் புகழ் பெற்றார்.

தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது ஹிந்தியில் 3 திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸுடன் பௌஜி என்ற படத்தில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து, “உங்கள் கொண்டாட்டத்தைக் கெடுப்பதற்கு மன்னிக்கவும். நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தில் மிருணாள் தாக்குர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் தற்போது தி ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி

செம்மஞ்சேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு

உயா்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொறியாளா் தற்கொலை

ஆக்ஸ்போா்டு பல்கலை.யில் பெரியாா் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT