திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படம் நேற்று (ஆக.15) வெளியானது.
இப்படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டது.
படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டுள்ள நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகின்றன.
மேலும் அதிர்ஷடமில்லாதவர் எனக் கூறப்பட்டு வந்த வதந்திகளும் உடைந்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
கிண்டல் செய்த ரசிகர்களே தற்போது பாராட்டுவது நெகிழ்ச்சியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் டிரெண்டாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.