செய்திகள்

இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத சம்பளம்! அதிர்ச்சியளித்த அல்லு அர்ஜுன்!

புஷ்பா - 2 படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்...

DIN

புஷ்பா - 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.

கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் உலகம் முழுவதும் பல ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

முக்கியமாக, இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 300 கோடியை ஈட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையிடுவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு வாயிலாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அல்லு அர்ஜுன் ஏன் பூலோக நட்சத்திர நடிகர்? இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வரவேற்பு புஷ்பா - 2 படத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸை தகர்க்கும். அல்லு அர்ஜுன் புஷ்பா -2 படத்திற்கு மட்டும் ரூ. 287.36 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். உலகில் வேறு எந்த நடிகருக்கும் இந்த உயரங்கள் அமைந்தது கிடையாது. அல்லு அர்ஜுன்தான் உண்மையான உச்ச நட்சத்திரம்” எனத் தெரிவித்துள்ளார்.

புஷ்பா - 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் இந்திய திரைத்துறையினரிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT