செய்திகள்

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

கோல்டன் ஸ்பேரோ பாடல் ஹிட்டாகியுள்ளது...

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.

தற்போது, இப்பாடல் யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

பெண்ணிடம் 5 பவுன் நகைகளைத் திருடியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT