செய்திகள்

கோட் படத்தில் பார்வதி நாயர்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் கோட் படத்தில் நடிகை பார்வதி நாயர்  இணைந்துள்ளார்.

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - The Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும், இப்படத்தின் கதை வித்தியாசமாகவும் அதிக திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

SCROLL FOR NEXT