செய்திகள்

எல்.ஐ.சி. பட தலைப்பு விவகாரம்: விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ்

DIN

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் தலைப்பு விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு எல்.ஐ.சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

படத்தை தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற வலியுறுத்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எல்ஐசி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை குறைக்கும் வகையில் படத்தில் தலைப்பு உள்ளது. நோட்டீஸ் பெற்ற 7 நாள்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT