ஜிப்ரான் இசையில் பாடல் பாடியுள்ள இசையமைப்பாளர் தேவா 
செய்திகள்

ஜிப்ரான் இசையில் பாடல் பாடியுள்ள இசையமைப்பாளர் தேவா!

சிம்பு தேவன் இயக்கியுள்ள போட் படத்தில் இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

DIN

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  7 வருடங்களுக்குப் பிறகு அவர் புதிய படத்தை இயக்கியுள்ளார். போட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.  முழுக்க முழுக்க கடலை மையமாகக்கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

5 மொழிகளில் இதன் வெளியானது. தமிழில் விஜய் சேதுபதி, இந்தியில் ஆமீர் கான், மலையாளத்தில் பிருத்விராஜ், கன்னடத்தில் கிச்சா  சுதீப், தெலுங்கில் நாக சைதன்யா ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். கானா பாடல் பாடும் ஒருவர் கிளாசிக்கல் பாடுவது போல அமைக்கப்பட்டுள்ளதாக தேவா கூறியுள்ளார்.

இதன் புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. முழுமையான பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும்.

இந்தப் படம் ஆக.2ஆம் தேதியன்று திரையில் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! | Chennai

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT