நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியைச் சந்தித்துள்ளார்.
நடன இயக்குநராக இருந்து நடிகரானவர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், சில தோல்விப் படங்களால் மார்கெட்டை இழந்தவருக்கு முனி திரைப்படம் திருப்புமுனையாக இருந்தது.
தொடர்ந்து, காஞ்சனா திரைப்படம் அபாரமான வரவேற்பைப் பெற்று லாரன்ஸ் படங்களுக்கென பார்வையாளர்களை உருவாக்கியது. இறுதியாக இவர் நடித்த சந்திரமுகி - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
அடுத்ததாக, காஞ்சனா - 4 திரைப்படத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளார். இதற்கிடையே, மாற்றம் என்கிற பெயரில் தன்னார்வ அமைப்பைத் துவங்கி ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் செய்கிறார். அதில் ஒரு பகுதியாக, ஏழ்மை நிலையிலுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களைக் கொடுத்து வருகிறார். அப்படி, இதுவரை 13 டிராக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து மாற்றம் அமைப்பிற்காக ஆசிகளைப் பெற்றுள்ளதாக ராகவா லாரன்ஸ் புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.