நடிகர் சித்திக் உடன் அவரது மூத்த மகன்.  
செய்திகள்

பிரபல மலையாள நடிகரின் மூத்த மகன் மரணம்!

பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் மூத்த மகன் (37) காலமானார்.

DIN

மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்திக். 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகளை பல முறை வென்றுள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் சித்திக் சிறப்பான படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழில் ரங்கூன், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது மூத்த மகன் 37 வயதான ராஹீன் சித்திக் காலமாகியுள்ளார். இவரது தம்பி ஷாஹீன் (35) மம்மூட்டியின் பதேமரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துணைக் கதாபாத்திரங்களில் முக்கியமான சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுவாசப் பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த ராஹீன் சித்திக் நுரையீரல் செயலிழப்பினால் காலமாகியுள்ளார்.

மலையாள சினிமா பிரபலங்கள்,சித்திக்கின் ரசிகர்கள் இந்தத் துயரத்தின்போது அவருடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT