விடாமுயற்சி அப்டேட் எப்போது? லைகா நிறுவனம் அறிவிப்பு!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் விடா முயற்சி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
துணிவு படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
Advertisement
Advertisement
இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “ஞாயிறு மாலை 7.03 மணி “ என பதிவிட்டு லைகா நிறுவனத்தை டேக் செய்துள்ளார்.
இதற்கு லைகா நிறுவனமும், “ஞாயிறு மாலை 7.03 மணி” எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.