முகப்பு
செய்திகள்

நடிகர் அஜித் குமாரை இயக்குவீர்களா? இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்!

நடிகர் அஜித் குமார் குறித்த கேள்விக்கு இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்...

Updated On : 1 ஜூலை 2026, 12:57 pm IST
நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி
பகிர்:

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி நடிகர் அஜித் குமார் குறித்து கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களை இயக்கி ஓரளவு கவனம் பெற்றிருந்த ஆர்ஜே பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவரை முன்னணி இயக்குநராக்கியுள்ளது.

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படமாக கருப்பு முதலிடத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்ஜே பாலாஜிடம், ‘நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் இயக்குவீர்களா?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, ஆர்ஜே பாலாஜி, ”உண்மையில் அதற்கான எந்தத் திட்டமும் இல்லை. நான் அஜித் சாருக்காக மட்டும் சிறப்பான கதையை எழுதினாலும் அது நடக்குமா என்றும் தெரியாது. என்னுடைய எழுத்தையும் வேலையையும் செய்வேன். ஒருவேளை அது அஜித் சாருக்காக அமைந்தால் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Director RJ Balaji has responded to a question about actor Ajith Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments