அஜித் குமாரின் டேர் டெவில் பட போஸ்டர் வெளியீடு!
நடிகர் அஜித் குமார் நாயகனாக நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நாயகனாக நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டூம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்புடன் அஜித்தின் கார் பந்தயம் பற்றிய ஆவணப் படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ அறிவிப்பும் வெளியானது.
கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, டேர் டெவில் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில், டேர் டெவில் படத்தில் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 2 அன்று தொடங்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ajith Kumar's Daredevil movie poster released!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.