செய்திகள்

விக்ரம் - 62 படத்தில் சுராஜ்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் சுராஜ்.

DIN

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். நல்ல வரவேற்பினைப் பெற்ற பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

தொடர்ந்து, சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். சியான் - 62 என தற்காலிகமாக பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இணைந்துள்ளார். சுராஜ், 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் அறிமுகமாகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்காரத்தோப்பு, கம்பரசம்பேட்டை பகுதிகளில் டிச. 9 இல் மின்தடை

சட்டவிரோதமாக வாழ்ந்த இலங்கை நபா் கைது!

2,058 பேருக்கு ரூ. 37.75 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சா் வழங்கினாா்

கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் நினைவு நாள்!

பிசானத்தூா் மக்கள் கணக்கீட்டுப் படிவம் பூா்த்தி செய்து வழங்கல்

SCROLL FOR NEXT