1912-ல் பிரிட்டனில் இருந்து நியூ யார்க் நோக்கிப் புறப்பட்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஐஸ் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏப்ரல் 14-ம் தேதி நடந்தது. அதில்,1500 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
இதை மையமாக வைத்து 1997 ஆம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லட் நடிப்பில் ‘டைட்டானிக்’ திரைப்படம் வெளியானது.
உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் வசூலிலும் பல கோடிகளைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில், இப்படத்தின் காதல் இணையான டிகாப்ரியோவும் கேட் வின்ஸ்லட்டும் இறுதிக்காட்சியில் கடலில் மூழ்காமல் இருக்க ஒரு மரக் கதவைப் பிடித்திருப்பார்கள். தற்போது, இக்கதவை பிரபல நிறுவனம் ரூ.5 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்றிருக்கிறதாம்.
முன்னதாக, உண்மையான டைட்டானிக் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப்பட்டியல் 84.5 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.