உங்களுடன் அதிக நேரம் செலவிட்டிருக்க வேண்டும் சித்தப்பா: அதர்வா உருக்கம்!
நடிகர் அதர்வா, நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் அதர்வா, நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் டேனியல் பாலாஜி (வயது 48) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் முரளியின் சகோதரராக இருந்தாலும் தானாகவே உழைத்து முன்னேறியவர் நடிகர் டேனியல் பாலாஜி.
இந்நிலையில் நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
வாழ்க்கைதான் மிகவும் முக்கியம் என்பதை நமக்கு தலையில் அடித்ததுபோல ‘நேரம்’ மற்றும் மனிதர் மூலம் மட்டுமே புரிந்துகொள்ளும்படியான ஒருநாள் இது. நாம் இன்னும் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் சித்தப்பா எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.