செய்திகள்

திரைவிழாவில் மகாராஜா!

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் திரைப்பட விழாக்களில் பங்குபெறவுள்ளது.

DIN

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, 'ஜவான்' உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் 50வது படமாக 'மகாராஜா' திரைப்படம் உருவாகி உள்ளது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜூன் 27 - 30 வரை நடைபெற்றவுள்ள இந்திய திரைப்பட விழாவில் மகாராஜா திரையிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பல்கலை. ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து: 4 மீனவா்கள் மீட்பு

விருத்தாசலத்தில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

ஊதிய நிலுவையால் தவிக்கும் ஊராட்சி ஊழியா்கள் போராட்டம் நடத்த முடிவு

SCROLL FOR NEXT