நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன். 
செய்திகள்

டிக்கெட் விற்பனை... ரஜினியை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்!

டிக்கெட் விற்பனையில் சிவகார்த்திகேயன் சாதனை...

DIN

டிக்கெட் முன்பதிவில் நடிகர் ரஜினியை பின்னுக்குத் தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் வெளியானது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்த நிலையில், சினிமா டிக்கெட் முன்பதிவில் முன்னணியிலிருக்கும் புக் மை ஷோ (book my show) செயலி வாயிலாக அமரன் திரைப்படத்திற்கு முதல் நாளில் 4.78 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே முதல் நாளில் அதிக முன்பதிவு சாதனையை செய்த படமாக நடிகர் விஜய்யின் கோட் (5.78 லட்சம் டிக்கெட்கள்) திரைப்படமே உள்ளது. இரண்டாவதாக நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் (4.7 லட்சம்) இருந்தது.

தற்போது, சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவில் ரஜினியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT