செய்திகள்

நிறங்கள் மூன்று வெளியீட்டுத் தேதி!

நிறங்கள் மூன்று வெளியீட்டுத் தேதி...

DIN

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

இதில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் நரேன் அரவிந்த் சுவாமியை நாயகனாக வைத்து இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளரான கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் கார்த்தி நரேனுக்கும் ஏற்பட்ட பிரச்னையே இதற்குக் காரணம்.

இந்த நிலையில், நிறங்கள் மூன்று திரைப்படம் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம், பாதுகாப்பு மீது நம்பிக்கை உள்ளது: ஆஸி. கேப்டன்

சு. வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம்! ராகுல் தலைமையில் போராட்டம்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

SCROLL FOR NEXT