பத்ம பூஷண் விருதுபெற்ற பாடகி ஷார்தா சின்ஹா காலமானார்!
சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்தார்.
பத்ம பூஷண் விருதுபெற்ற நாட்டுப்புறப் பாடகி ஷார்தா சின்ஹா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்தார்.
72 வயதாகும் ஷார்தா சின்ஹா ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்துதர பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்ததுடன் அவர் பூரண நலம்பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷார்தா சின்ஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அன்ஷுமன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
‘பிகார் கோகிலா’ என அவரது ரசிகர்கள் இவரை செல்லமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. போஜ்புரி, மைத்திலி, மகாஹி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர் இவர். பிகார் மாநிலத்தின் பாரம்பரிய இசையை வெளியுலகுக்கு கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு அளப்பரியது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஆபத்தான நிலையில் நாட்டுப்புற பாடகி..!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.