கேம் சேஞ்சர்: கியாரா அத்வானியின் புதிய போஸ்டர்!
கேம் சேஞ்சர் படத்தின் டீசரை முன்னிட்டு நடிகை கியாரா அத்வானியின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
நாயகியாக கியாரா அத்வானி நடிக்க, படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பான் இந்தியா படம் என்பதால் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், நடிகை கியாரா அத்வானியின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தியன் 2 வெற்றி பெறாததால் இந்தப் படம் ஷங்கருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது.
உலக முழுவதும் படம் அடுத்தாண்டு ஜன.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.