நடிகை வித்யா பாலன் 
செய்திகள்

ராசியில்லாதவரா வித்யா பாலன்? தென்னிந்திய படங்களில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட துயரக் கதை!

நடிகை வித்யா பாலன் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்டுள்ளார்.

DIN

மலையாளியான நடிகை வித்யா பாலன் பாலிவுட்டில் பிரபல நாயகியாக அறியப்படுபவர்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெளியான ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

பல விருதுகளை வென்றுள்ள இவர் கஹானி படத்தின் மூலம் ஹிந்தியில் முக்கிய நாயகியானார்.

தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்கிற வித்யா பாலன் நாயகியை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வித்யா பாலன்,நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2003-ல் பாலோ தேகோ என்கிற வங்காளத் திரைப்படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் மூத்த நடிகையாக இருக்கிறார்.

வித்யா பாலனின் ‘ஷெர்னி’ படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வித்யா பாலன் முன்னதாக ஒரு விடியோவில் பேசியதாவது:

தென்னிந்தியாவில் ஒன்றரை வருடமாக நடித்தும் ஒரு படமும் முடியவில்லை. நடிகர் மோகன்லாலுடன் நான் ஒரு படத்தில் நடித்தேன். ஒரு ஷெட்யூல் முடிந்தபின் 7-8 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின்னர் மோகன்லால் படம் பாதியில் நிற்கவே நான் ராசியில்லாதவள் என்ற பேச்சு கிளம்பியது.

நான் ஒப்பந்தமாகியிருந்த அனைத்து படங்களிலும் இருந்தும் தூக்கி எறியப்பட்டேன். 2 முக்கிய மலையாள படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்தும் நீக்கப்பட்டேன்.

இதனால் எனது தன்னம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் முக்கியமான ஒரு பெரிய தமிழ்ப் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டேன் என்றார்.

தற்போது, பூல் புலையா - 3 படம் நவ.1இல் ரிலீஸாகி ரூ.222 கோடி வசூலித்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

SCROLL FOR NEXT