ஸ்ரீ லீலா, ராணா, இயக்குநர் ராஜமௌலி.  
செய்திகள்

10க்கும் அதிகமான பிரபலங்களுடன் உரையாடல்..! ராணா டகுபதி நிகழ்ச்சியின் டிரைலர்!

தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கிய புதிய நிகழ்ச்சியின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கிய புதிய நிகழ்ச்சியின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது, ஜெய் ஹனுமான் இரண்டம பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அமேசான் பிரைம் தயாரிப்பில் புதிய நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கியுள்ளார். இதில் சினிமா பிரபலங்களின் நேர்காணல், கேள்வி பதில்கள் அடங்கியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் ராணாவுடன் இயக்குநர்கள் ராஜமௌலி, கோபால் வர்மா, ரிஷப் ஷெட்டி, நடிகைகள் பிரியங்கா மோகன், ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌதரி, மாளவிகா டகுபதி, நேகா ஷெட்டி, பிரகதி ஷெட்டி, நடிகர்கள் நானி, துல்கர் சல்மான், தேஜா என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியினை வினோத் வி தலவனா, சுக்விந்தர் சிங் சௌஹான், ஸ்ரீகாந்த் பிரபாலா இயக்கியுள்ளார்கள்.

இதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இணையத் தொடராக நவ.23ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT