முகப்பு
செய்திகள்

விஜய் 69 படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே..!

நடிகர் விஜய்யின் கடைசி பட படப்பிடிப்பு புகைப்படத்தை நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.

Updated On : 20 நவம்பர் 2024, 4:03 pm IST
விஜய் 69 படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே.
பகிர்:

நடிகர் விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாலை 6.30 மணிக்கு ’சென்னை மார்னிங்ஸ் டே 16’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படம் அக்.2025இல் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகுமென படக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த அக்.4ஆம் தேதி படத்தின் பூஜை தொடங்கியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதில் பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ நடிக்கிறார்கள்.

சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே ஷாகித் கபூருடன் தேவா படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments